திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி திருத்தலத்தில் பெரிய வியாழன் அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி திருத்தலத்தில் பெரிய வியாழன் அனுசரிப்பு.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி திருத்தலத்தில் பெரிய வியாழன் அனுசரிப்பு.

திருத்தல அதிபர் சில்வெஸ்டர் 12 சீடர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டார். கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மாதம் சாம்பல் புதன் அன்று முதல் 40 நாள் தவக்காலம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர். 

தூத்துக்குடி மறை மாவட்டத்தில் ஆயர் டாக்டர் ஸ்டீபன் அந்தோணி வழிகாட்டுதலின்படி அனைத்து தேவாலயங்களிலும் தவக்கால சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியான திருச்செந்தூர் அருகே உள்ள பிரசித்தி ஆலந்தலையில் உள்ள இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் தவக்காலத்தின் புனித வார தொடக்கத்தில் குருத்தோலை பவனியும் சிறப்பாக நடைபெற்றது. 

பெரிய வியாழனை முன்னிட்டு திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் இறை வார்த்தை வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்றது. இதில் திருத்தல அதிபர் சில்வெஸ்டர் இயேசுநாதர் செய்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் 12 சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். 

 திருப்பலி முடிவில் திவ்ய நற்கருணை இடமாற்றம் செய்யப்பட்டு புனித ராயப்பர், சின்னப்பர் தேவாலயத்தில் இரவு 12.00 மணி வரையில் நற்கருணை ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆலந்தலை கார்மல் நடுநிலைப்பள்ளியின் அருட் சகோதரிகள், ஆசிரியைகள், மாணவியர்கள் திருப்பலியில் சிறப்பித்தனர். 

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை டைட்டஸ் மற்றும் திருத்தல நிதி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad