மதிமுக துரை வைகோ, 55ஆவது பிறந்த நாள் - நாசரேத்து நகர மதிமுக சார்பில் திருமறைஊர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

மதிமுக துரை வைகோ, 55ஆவது பிறந்த நாள் - நாசரேத்து நகர மதிமுக சார்பில் திருமறைஊர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கல்.

மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ - 55ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 2-4-2026 அன்று காலை 9:00 மணிக்கு ஆழ்வை ஒன்றிய மதிமுக மற்றும் நாசரேத்து நகர மதிமுக சார்பில் நாசரேத்து திருமறைஊர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வே.இரஞ்சன், ஆழ்வை ஒன்றிய மதிமுக செயலர் ஜெயக்கொடி ச.அரிகரன்,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக இலக்கிய அணிச் செயலாளர் மூ.பாபுசெல்வன், ஆழ்வை ஒன்றிய மதிமுக துணைச் செயலர் லூ.மாசில்லாமணி, மதிமுக தொண்டர் படை வகுத்தை முத்துகிருஷ்ணன், மானாட்டூர் சோ.விஜயராஜன், வெள்ளரிக்காய் ஊரணி முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad