கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, வடசேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், ராணிதோட்டம் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் சுபின் (30), ஈசாத்திமங்கலம் பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் ரமேஷ்குமார் @ செம்பட்டை, சாமியார் மடம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது பிரோஸ்கான் (29),
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தங்ககனி (32) ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.50 கிலோகிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்கள் மீது இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக