கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் 45 காவலர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான பயிற்சி வகுப்பினை இன்று தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் இருவேளை நடைபெற உள்ளது. காலை 9.30 முதல் 12.30 வரை மற்றும் மதியம் 03.30 முதல் 05.30 வரை நடைபெறும்.
இந்நிகழ்ச்சியின் போது நாகர்கோவில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பொன்னுருளு மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக