கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி வேட்டையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 மே, 2026

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி வேட்டையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி வேட்டையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது.

மே 24, 2026, கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்க “போதை இல்லா குமரி” என்ற இலக்குடன் காவல்துறை உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவரின் மகன் சுதன் (28) மற்றும் சமாதானபுரம் பகுதியை சேர்ந்த ஜுரம் ராஜ் என்பவரின் மகன் அபினேஷ் (24) ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவர்மீதும் கன்னியாகுமரி காவல் நிலைய குற்ற எண் 132/2026 U/S 8 (C) r/w 20(b),(ii),(B),25 NDPS Act கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித தயக்கமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் இந்த தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இளைஞர்களை பாதுகாக்கும் காவல்துறையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad