கத்தி முனையில் 19 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 1.25 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 மே, 2026

கத்தி முனையில் 19 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 1.25 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளை !

கத்தி முனையில் 19 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 1.25 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளை !
வாணியம்பாடி, மே.24 - 
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த  ஆண்டியப்பனூர், பாரஸ்ட் பங்களா பகுதியில் வசிக்கும் அகஸ்டின். இவர் அப்பகுதியில் கோழி பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அகஸ்டின் கோழிகளுக்கு தீவனம் வைக்க கோழி பண்ணைக்கு சென்றுள்ளார். அப்போது ராஜதிலகம் (வயது 40) வீட்டிற்குள் சென்ற போது அங்கே மறைந்து இருந்த மர்ம நபர்கள் ராஜதிலகத்தை அடித்து கீழே தள்ளி கழுத்தில் கத்தியை வைத்து வாயைப் பொத்தி கத்துனா குத்துவேன் என்று மிரட்டி கழுத்தில் அணிந்து இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் வீட்டில் வைத்து இருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 1.25 லட்சம் சுருட்டிக் கொண்டு இருந்த போது பெண் மயங்கினார்.இதனை பார்த்த மர்ம நபர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த மற்றொரு சங்கிலியை விட்டு விட்டு ஓட்டம்  பிடித்தனர்.  பின்னர் மயக்கம் தெளிந்த பெண் அவரது கணவருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து பெண்ணின் கணவர் அகஸ்டின் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.விசாரணையில் பாழடைந்த ஃபாரஸ்ட் பங்களா அருகே வண்ணார காளியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் அமர்ந்து இருந்து பின்னர் அருகே உள்ள புளியந்தோப்பில் குடித்து விட்டு அங்கிருந்து கை உரை, முக முடிஅணிந்து கொண்டு கையில் ரசாயன பவுடர் எடுத்து கொண்டு சென்று பெண்ணிடம் கத்தி முனையில் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்துள்ளது. 
சம்பவம் குறித்து குருசிலாப்பட்டு போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர் களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்ற னர்.மர்ம நபர்கள் பெண்ணுக்கு கத்தியை கட்டி நகை பணம் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனத்தின் இணை ஆசிரியர் மு.பாக்கியராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad