தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் காயல்பட்டினம் கடற்கரை திடலில்பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகைஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 மே, 2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் காயல்பட்டினம் கடற்கரை திடலில்பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகைஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் காயல்பட்டினம் கடற்கரை திடலில்
பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. 

இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12வது மாதமான துல்ஹஜ்ஜின் 10வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காயல்பட்டினம் கிளையின் சார்பாக அங்குள்ள கடற்கரை திடலில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இந்தச் சிறப்புத் தொழுகையை ஜாமீஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் இமாம் தூத்துக்குடி மாவட்ட டிஎன்டிஜே பேச்சாளர் ஷரீஃப் நடத்தி வைத்தார். தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

இப்ராஹீம் நபியின் தியாகத்தைப் போற்றும் வகையில், மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறி உற்சாகத்துடன் பெருநாளைக் கொண்டாடினர். 

இதற்கான ஏற்பாடுகளை காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad