சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் எம்.எல்.ஏ சிந்துவை சந்தித்து வாழ்த்து ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 மே, 2026

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் எம்.எல்.ஏ சிந்துவை சந்தித்து வாழ்த்து !

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் எம்.எல்.ஏ சிந்துவை சந்தித்து வாழ்த்து !
குடியாத்தம் . மே 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் சிலம்பம் பயிற்சி மாணவர்கள் குடியாத்தம் தொகு தியில் த.வெ.க.சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற க.சிந்து‌ . அவர்களை தாழை சிலம்பு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் நேரில் சந்தித்துவாழ்த்து தெரிவித்தனர்.புதுப்பிக்கப்பட்ட புதிய சட்டமன்ற அலுவலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, சிலம்புகலை  வாத்தியார் சிவக்குமார் தலைமையில் மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினர் சிந்துவை சந்தித் தனர். அப்போது மாணவர்கள் அவர்களு க்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும், சிலம்பம் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தனி இடவசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும், சிலம்பக் கலைக்கு அரசு வேலை வாய்ப்பில் தற்போது வழங்கப்பட்டுள்ள 3 சதவீத ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பின ரிடம் முன்வைத்தனர். என இந்த கோரிக் கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் சிந்து மாணவர்களிடம் தெரிவித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad