வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சியில். வெற்றி நகர் என்று வீட்டு மனை பிரிவு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 மே, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சியில். வெற்றி நகர் என்று வீட்டு மனை பிரிவு !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சியில். வெற்றி நகர் என்று வீட்டு மனை பிரிவு  !
குடியாத்தம் ,மே 28 -
குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சியில் வீட்டு மனை பிரிவுகளில். அடிப்படை வசதிகள் இல்லாமல் போடப்பட்டுள்ளது
இதில் சுமார் 144 க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் போடப்பட்டுள்ளது  மனை பிரிவுகள் போட வேண்டுமென்றால் 
தார் சாலை கழிவுநீர் கால்வாய் மின் கம்பங்கள் குடிநீர் தேக்க தொட்டி விளையாட்டு மைதானம் சமுதாயக்கூடம் அமைப்பதற்கான இடங்களை விட்டு மனை பிரிவு போட வேண்டும். ஆனால் தற்போது நாராயணி கிரி நகர் என்று பெயரை மாற்றி சதுர அடி 400 என்று இருந்ததை பெயர் மாற்றி 800 ரூபாய் சதுர அடி என்று 90-க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டு ள்ளது குறிப்பாக வீட்டுமனை பிரிவுகளு க்கு அனைத்து வசதிகளும் உள்ளதா என்று ஊராட்சி நிர்வகம் ஆய்வு செய்து ஒப்புதல் சான்று வழங்க வேண்டும் 
ஆனால் எந்த விதமான அடிப்படை வசதி இல்லாமல் சான்றுகள் வழங்கப்பட்டுள் ளது இதனால் வீட்டுமனைகள் வாங்கும் பொது மக்களுக்கு பெரிதும் சிக்கலாக உள்ளது எனவே அடிப்படை வசதி இல்லாத வீட்டு மனை பிரிவுகள் போடும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக் கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு  தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad