தென்திருப்பேரை, மே.29- தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவ திருப்பதி தலங்களில் 9வது தலமாகவும் குருவுக்கு அதிபதியாகவும் விளங்கும் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மூலவர் ஆதிநாதர் நின்ற கோலத்திலும், ஆதி நாயகி, குருகூர்வல்லி ஆகிய அம்பாள்களும் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருதலத்தில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி மாதம் விசாகம் அன்று அவதரித்ததை முன்னிட்டு அவரது அவதார திருவிழா வெகு விமரிசையாக மே 21 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது
மே 25ம் தேதி 5ம் நாள் திருவிழாவில் நவதிருப்பதி பெருமாள்களை வரவேற்ற நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சியும், இரவு கருடசேவை நிகழ்ச்சியில் நவதிருப்பதி பெருமாள்கள் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் தந்த பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தனர்.
9 ம் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 4 மணிக்கு விஸ்வரூபம் 4.15 மணிக்கு திருமஞ்சனம். 4.45 மணிக்கு தீபாராதனை. 5.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி. 6.30 மணிக்கு அர்ச்சகர்கள் கண்ணன். விவேக். பாலாஜி ஆகியோர் சுவாமி நம்மாழ்வார் பல்லக்கில் அலங்காரம் செய்து 7.15 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார்.
7.45 மணிக்கு நாங்குனேரி ஜீயர் ஸ்வாமி வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் கோவிந்தா கோபாலா என தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். மணி அளவில் தேர் நிலைக்கு வந்தது.
இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி ஜீயர் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன். உறுப்பினர்கள் காளிமுத்து, ராமலட்சுமி, பொன்ராஜ், கன்னிராஜா, ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக