குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் !வ - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மே, 2026

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் !வ

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் !
குடியாத்தம் , மே 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத் திற்கு வட்டாட்சியர் பிரியா தலைமை தாங்கினார் ஒருங்கிணைந்த வேளாண் மை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னில வகித்தார் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரேவதி  வரவேற்றார்
இக்கூட்டத்தில் விவசாயி சங்க பிரதிநிதி கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார்கள் 
சின்ன தோட்டாளம் குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்தம் கம்பிகள் செல்வ தால் மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் உள்ளது மின்சார வாரியம்அதை மாற்றி அமைக்க வேண்டும். உள்ளி . மற்றும் கோப்பம்பட்டி வரை முதலமைச்சர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார்.1.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை . முழுமையாக கட்டி முடிக்கப்பட வில்லை மேலும் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது அகரம் சேரி பகுதியில் உள்ள தோட்டக்கலை துறை க்கு சொந்தமான 150 ஏக்கர் நிலத்திற்கு பலாற்றில் இருந்து தண்ணீர் விட வேண்டும் அகரஞ்சேரி பள்ளி அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அப்புறப் படுத்த வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார்கள் 
இக்கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் வளத்தூர் வருவாய் ஆய்வா ளர் புகழரசன்  விவசாய சங்கப் பிரதிநிதி கள் சாமிநாதன் துரை செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் தலைமை விடத்து துணை வட்டாட்சியர் தனலட்சுமி நன்றி கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad