நாமக்கல், மே.19:
தமிழ்நாடு லிங்கம் சங்கம் பசவர் இயக்கத்தின் சார்பில் ஸ்ரீ பசவர் ஜெயந்தி விழா நாமக்கல் மாநகர் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு நிறுவன தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வை. பாலுசாமி தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் டி.சி. சேகர் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் டி. சவுந்தரபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலஸ்ரீ விஜய் ஆனந்த சுவாமி சிவாச்சாரியார், சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமி, ஜி. சிவாச்சாரியார், எஸ். மாணிக்கம் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஸ்ரீ பசவர் படத்திற்கும் லிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும், மூத்த நிர்வாகிகள், இளைஞரணி மற்றும் பூசாரிகள் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக