இராணுவ வீரர் புகழேந்திக்கு ஊர் பொது மக்கள் ஆரத்தி எடுத்து மேள தாளங்களு டன் பிரமாண்ட உற்சாக வரவேற்பு !
திருப்பத்தூர் ,மே19 -
திருப்பத்தூர் மாவட்டம் பாகிஸ்தான் தீவிர வாத கும்பலை துப்பாக்கி சூடு நடத்தி வீழ்த்தியதற்கு ஜனாதிபதியிடம் வீர தீர விருது பெற்று சொந்த ஊர் திரும்பிய இராணுவ வீரர் புகழேந்திக்கு ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மேலதளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் வன்னியநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் - உஷா தம்பதியி னரின் மகன் புகழேந்தி. இவருக்கு ஜெயஶ்ரீ என்ற மனைவியும், 5 வயதில் தேஜஸ்வி என்ற பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் இவர் 2012 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் காவல் படையில் ஆவடியில் பணியில் சேர்ந்து பின்னர் சத்தீஷ்கர், ஶ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை என்கவுண்டர் குழுவில் இணைந்து பணியாற்றி 20 க்கும் மேற்பட்ட ஆப்ரே ஷன்களில் வெற்றிபெற்று 40 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்துள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாத கமாண்டர் துப்பாக்கி சூடு நடத்தி அவரை என்கவுண்டர் செய்துள்ளார். அதனை பாராட்டி இந்திய ஜனாதிபதி அவர்களால் இவருக்கு வீர தீர விருது அறிவிக்கப் பட்டு கடந்த மாதம் அந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் விடுமுறையில் இன்று சொந்த ஊருக்கு திரும்பிய புகழேந்திக்கு ஆம்பூர் ரயில் நிலையம் மற்றும் சொந்த கிராமமான வன்னிய நாதபுரத்தில் ஊர் பொதுமக்கள் இவருக்கு மாலைகள் அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.ஊர் திரும்பியதும் தன் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். மேலும் அவருடைய கிராமத் தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இவருக்கு பேனர்கள் வைத்து வாழ்த்துக் கள் மற்றும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக