குடியாத்தம் பகுதியில் பலத்த கனமழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 மே, 2026

குடியாத்தம் பகுதியில் பலத்த கனமழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம் !

குடியாத்தம்  பகுதியில் பலத்த  கனமழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி 
சூறாவளி காற்றால்  வாழை மரங்கள் சேதம் !
குடியாத்தம் ,மே 27 -
             வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் வெளி யில் செல்ல பெருதும் அவதிக்குள்ளாகி வந்தனர் குறிப்பாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் அனல் காற்று வீசி வந்த நிலையில் நேற்று மாலை குடியாத்தம் நகரம், உப்பர பள்ளி பெரும்பாடி , பேர்ணாம்பட்டு ,   சேம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது   இதனால் பூமிக் குளூந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது மேலும் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி பகுதியில் சூறாவளி காற்றால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்தது மேலும் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல டன் மாங்காய்கள் மரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுந்து சேதம் ஆகி உள்ளது
இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர் இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவ சாயிகளின் உரிக்கையாக வைத்துள்ளது அதே நேரத்தில் மாலை மழை பெய்ததா மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad