இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளியின் தலைவர் அழகேசன் செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமை ஆசிரியர் திருநீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் செய்திருந்தார்.
இதில் தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த கபடி முன்னாள் வீரர்கள் கபடி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்வில் மொத்தம் 60 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இவர்களுக்கான படிப்புக்கான கல்வி கட்டணம் தங்கும் விடுதி கட்டணம் அனைத்து செலவுகளையும் பள்ளி நிர்வாகம் ஏற்று கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக