நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜூன், 2026

நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா!!

நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா!!
ராணிப்பேட்டை , ஜுன் 3 -
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா, ஒன்றிய கழகச் செய  லாளர் வடிவேலு அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெமிலி பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப் பாளர் பவானி வடிவேலு ஆகியோர்  முன்னிலை வகித்தனர். பிறந்தநாள் விழாவின் போது கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் நெமிலி அண்ணா சாலையில் ஊர்வலமாகச் சென்று, பேரறி ஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அலங்கரி த்து வைக்கப்பட்டிருந்த, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயின்று, பனிரெண்டாம் வகுப்பு தேர்வில், ஒன்றிய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ரூபாய் 10,000/- இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூபாய் 7000/- மூன்றாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூபாய் 5000/- என கல்வி உதவித்தொகை யை, ஒன்றிய கழக செயலாளர் வடிவேலு அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர் ந்து, 1000 நபர்களுக்கு அன்னதானம், மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இவ்விழாவில் நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகா தேவி சரவணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் புருஷோத் தமன், முகமது அப்துல் ரகுமான், பாண்டி யன், நெமிலி பேரூர் நிர்வாகிகள் வழக் கறிஞர் கார்த்திகேயன், சேகர், வழக்கறி. ஞர் வெங்கடேசன், ராம்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad