நிலத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேரை தாக்கியதில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் தீவிர விசாரணை !
திருப்பத்தூர் , ஜீன் 1 -
திருப்பத்தூர் மாவட்டம் அருகே நிலத் தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மூவர் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற நாராயணனுக்கு திருவண்ணாமலை சாலையில் சுமார் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அவரது மகன் ரகுராமன் தொழில் தொ டங்கும் நோக்கில் கட்டிடம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், அணேரி பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சிவா என்பவர், அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரி வித்ததுடன், அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டாடா ஏசி வாகனத்தை சேதப் படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அணேரி ஊராட்சி மன்ற தலை வரின் கணவர் சிவா மற்றும் கராத்தே சிவா, திருப்பதி, தீனதயாளன், சீனி வாசன், தேவயானி, அம்பிகா உள்ளிட் டோர் சேர்ந்து ரகுராமன் மற்றும் அவரது இரு அண்ணன்மார்களை இரும்புக் கம்பிகள் மற்றும் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்து மயக்கமடைந்த ரகுராமன் மற்றும் அவரது சகோதரர்கள் மூவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கிராமிய போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். நில உரிமை மற்றும் சொத்து தகராறு தொடர் பாகவே இந்த மோதல் ஏற்பட்டதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.இதுகுறித்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சிவராமன் கூறுகையில், “எங்களுக்குச் சொந்தமான இடத்தில் தொழில் தொடங் குவதற்காக கட்டிடம் அமைத்து வருகி றோம் . அந்த சொத்தை அபகரிக்கும் நோக்கில் சிலர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.மேலும் எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய பாது காப்பு வழங்குவதுடன், எங்களது சொத் திற்கான உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக