கூலித் தொழிலாளியின் மகன் சாலை விபத்தில் மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூன், 2026

கூலித் தொழிலாளியின் மகன் சாலை விபத்தில் மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் !

கூலித் தொழிலாளியின் மகன் சாலை விபத்தில் மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் !
ராணிப்பேட்டை , ஜீன் 1 -
ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காடு, விலாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 34)சதாநந்தம், மே 29 அன்று விலாபாக்கம்  கிராமம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் விபத்தில் விபத்துக்குள்ளானார். மே 31 அன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்,  அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது உடல் உறுப்பு களை தானம் செய்ய முன்வந்தனர். அவரது நுரையீரல்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் காவேரி மருத்துவமனையிலும் , மற்றொரு சிறுநீரகம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் பெறப்பட்டன. அவர் மனைவி பெயர்  அன்பரசு . அவரது தந்தை சதானந்தன் ஒரு தச்சர் மற்றும் அவரது தாய் காஞ்சனா, இவர்களுக்கு நான்கு வயது மகன் ராக்கி மற்றும் இரண்டு வயது மகள் ராணியா  என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் 
இறை ஆசிரியர் மு. பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad