குடியாத்தத்தின் அடையாளமாக விளங் கக் கூடிய 30 கண் ஓராவதி சீரமைக்கும் பணி தொடக்கம்!
குடியாத்தம் ,ஜூன் 12-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பழமை வாய்ந்த .30.கண் ஓராவதி சீரமைக்கும் பணி ரயில்வே நிர்வாகம் தொடக்கம் ரயில்வே தரை பாலத்தை சீரமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு - ரயில்வே போலீசார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பணி தொடக் கம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மாணங்குப்பம் ரயில்வே தரைபாலம் கடந்து சித்தாதூர், ஓலக்காசி, நத்தமேடு ஆலம்பட்டறை, பட்டு உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து நாள்தோறும் குடியாத்தம் நகரப் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் விவசாய நிலத்திற்கு செல்லவும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் இந்த ரயில்வே தரைப்பாலம் வழியாக இருசக்கர வாகனம் மூலம் வந்து சென்று வருகின்றனர் அதேபோல இந்த பகுதி வழியாக இறந்தவர் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு வேன் மூலம் செல் லவும் கர்ப்பிணி மற்றும் நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல வும் இந்த வழியை பயன்படுத்தி வந்த நிலையில்தற்போது ரயில்வே துறையின் மூலம் பழுதடைந்துள்ள தரைப்பாலத்தை வலுப்படுத்தும் பணியை தொடங்க இருந்த நிலையில் அதற்கு அந்தப் பகுதி யை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் பாலத்தின் உள் அளவு குறைப்பதால் கனரக வாகனங்கள் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் மேலும் தாங்கள் குடியாத்தம் பகுதிக்கு செல்ல சுமார் 5 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய சூழல் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் பழமையான பழுதடைந்த பாலத்தை வலுப்படுத்தும் பணியை இன்று ரயில்வே துறையினர் மேற் கொண்டனர் இதனை அடுத்து ரயில்வே போலீஸ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப் பட்ட நிலையில் தற்போது பாலத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது இதனால் அந்த பகுதி யில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக