காவல் ஆய்வாளர் திலீபன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஆறுமுகநேரி பகுதி வியாபாரிகள் மற்றும் மக்கள் நல போராட்ட குழுவினர் நெல்லை சரக டிஐஜியிடம் நேரில் மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 ஜூன், 2026

காவல் ஆய்வாளர் திலீபன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஆறுமுகநேரி பகுதி வியாபாரிகள் மற்றும் மக்கள் நல போராட்ட குழுவினர் நெல்லை சரக டிஐஜியிடம் நேரில் மனு.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் திலீபன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி  ஆறுமுகநேரி பகுதி வியாபாரிகள் சங்கம் மற்றும் மக்கள் நல போராட்ட குழுவினர் சார்பில் நெல்லை சரக டிஐஜியிடம் நேரில் மனு அளித்ததால் பரபரப்பு - அடுத்த கட்டமாக தமிழக முதல்வருக்கும் மனு அனுப்ப முடிவு என பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் திலீபன். இவர் மீது சமீபத்தில் எழுந்த புகாரைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி பணியிடை நீக்கம் செய்திருந்தார்.  

உடனடியாக அந்த பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மீண்டும் அவருக்கு ஆறுமுகநேரி காவல் நிலையத்திலேயே பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆறுமுகநேரி பகுதி மக்கள் நல போராட்டக் குழு மற்றும் வணிகர்கள் சங்கம் சார்பில் நெல்லை சரக டிஐஜி யிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதே கோரிக்கைக்காக கடந்த 5 ம் தேதி  
ஆறுமுகநேரி ஊர் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வாடகைக்கு இயக்கப்படும் ஆட்டோ, கார்கள் என எதுவும் இயங்கவில்லை. 

இந்த நிலையில் இன்று டிஐஜி இடம் மனு அளித்தது குறித்து மக்கள் நல போராட்டக் குழுவின் தலைவர் ஆறுமுகநேரி தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது. - "ஆறுமுகநேரியில் தியாக பூமி எனப்படும் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக காவல் ஆய்வாளர் திலீபன் பணியாற்றி வந்துள்ளார். 

அவர் பணியில் இருந்த காலத்தில் கஞ்சா புழக்கம், சண்டை சச்சரவுகள், திருட்டு மற்றும் போதை போன்ற எந்தவித சமூக விரோத செயல்களும் இன்றி சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிம்மதியாக வாழும் சூழலை அவர் உருவாக்கினார். கடைகளிலோ, சாலைகளிலோ எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை எனவும்,

இத்தகைய சூழலில், எந்தவித முறையான புகாரும் இன்றி, சிலரது தூண்டுதலின் பேரிலும், பொய்யான புகாரின் அடிப்படையிலும் அவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்து, அவரை மீண்டும் ஆறுமுகநேரியிலேயே பணியமர்த்த வேண்டும். அவர் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைக்க வேண்டும் என்றும்,

இந்த காவல் அதிகாரிக்கு ஆதரவாக ஆறுமுகநேரி வணிகர் சங்கம், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து கடந்த 5-ஆம் தேதி வாகனங்களை இயக்காமல் முழு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் ஆறுமுகநேரியே வெறிச்சோடி காணப்பட்டது. 

மாலையில் மக்கள் நல போராட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. சமூக விரோதிகளின் தூண்டுதலால் தான் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அந்த சமூக விரோதிகள் யார் என்பதை கண்டறிவது காவல்துறையின் கடமையாகும்.
இவ்விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை துணைத் தலைவர் (DIG) அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். 

அடுத்த கட்டமாக ஐஜி (IG) மற்றும் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்ப உள்ளோம். ஆறுமுகநேரி மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் நிம்மதியாக வாழ திலீபன் போன்ற நேர்மையான அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்."இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad