ஸ்ரீவைகுண்டம் ஜூன் 9. நவதிருப்பதிகளில் 9 வது கோயில் ஆழ்வார்திருநகரி. இன்று கருட சேவை நடைபெற்றது ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் எட்டு மணிக்கு திருமஞ்சனம் 10 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீதேவி பூதேவி. ஆதிநாயகி குருகூர் நாயகி. தாயார் களுடன் சயனககுறட்டிற்கு எழுந்தருளினார்.
நம்மாழ்வார் பெரிய கோவில் எழுந்தருளினார். பின்னர் அலங்காரம். தீபாராதனை நடந்தது . நாலாயிர திவ்ய பிரபந்த சேவா காலம் சேவித்தனர். சாத்துமுறை நடைபெற்று தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை . உற்சவர் பொலிந்து நின்றபிரான். நம்மாழ்வார் வாகனகுறட்டிற்கு எழுந்தருளினார் கள் . கருட வாகனத்தில் பொலிந்து நின்றபிரான் அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் அலங்கரிக்கப்பட்டு 7.30 மணிக்கு கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
8 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடைபெற்றது பின்னர் மாட வீதி உலா வந்தது.
இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர். அர்ச்சகர்கள் கண்ணன்.விவேக். சுவாதி. நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக