திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஜூன் முதல் வெள்ளிக்கான சிறப்பு வழிபாடு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 ஜூன், 2026

திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஜூன் முதல் வெள்ளிக்கான சிறப்பு வழிபாடு.

திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஜூன் முதல் வெள்ளிக்கான சிறப்பு வழிபாடு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு புதிய குருக்கள் பங்கேற்பு.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் ஜூன் மாதம் முதல் வெள்ளிக்கான சிறப்பு திருப்பலி அருட்தந்தை மதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அருட்தந்தை மனோஜ் சிறப்பு நற்செய்தியை வழங்கினார். 

இந்தத் திருப்பலிக்கு புதிய குருக்களாக பொறுப்பேற்று வருகை புரிந்த அருட்தந்தையர்கள் மதன், மனோஜ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரையும் திருத்தல அதிபர் சில்வெஸ்டர் கவுரப்படுத்தினார். முடிவில் கொழுந்தட்டு பங்குத்தந்தை பீட்டர் பால் சிறப்பு ஜெப வழிபாடு செய்தார். 

இதில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கள்ளிகுளம் ஆல்வின், ரெஜினா மேரி குடும்பத்தினர் சார்பில் அனைவருக்கும் மதிய அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை சூசை ரத்தினம், திருத்தல நிதி குழுவினர் பங்கு இறைமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad