நந்தியாளத்தில் உடைந்த குடிநீர் குழாயால் தண்ணீர் வீணாகிறது பள்ளி மாணவன் சறுக்கி விழும் அபாயம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூன், 2026

நந்தியாளத்தில் உடைந்த குடிநீர் குழாயால் தண்ணீர் வீணாகிறது பள்ளி மாணவன் சறுக்கி விழும் அபாயம் !

நந்தியாளத்தில் உடைந்த குடிநீர் குழா யால் தண்ணீர் வீணாகிறது பள்ளி மாணவன் சறுக்கி விழும் அபாயம் !
ராணிப்பேட்டை , ஜுன் 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் நந்தியாளம் கிராமத்தில், ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ் ணர் கோவில் அருகே உடைந்திருந்த குடி நீர் பைப் லைன் சமீபத்தில் சரி செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. எனினும், தற் போது மீண்டும் அதிகளவில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலை யில் தேங்கி நிற்பதால், அப்பகுதி யில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று அந்த வழியாக சென்ற மாணவன் ஒருவர் தேங்கிய நீரில் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டதாகவும், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடி யாக மாணவனை மீட்டதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.இதுபோன்ற சம்பவங்க ளால் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்எதிர்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு?” என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.எனவே, நந்தியாளம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் கசிவை முழுமையாக சரிசெய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad