ஜீன்:29, நாசரேத் பேரூர் தி.மு.க சார்பில் மாதா மாதம் நடைபெறும் செயல் வீரர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்க்கு நகர அவை தலைவர் கருத்தையா தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் வரவேற்று பேசினார். நகர துணை செயலாளர் மாரிமுத்து, நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
இலக்கிய அணி அமைப்பாளர் தாசில்தார் ஓய்வு ஐயாகுட்டி, வார்டு பிரதிநிதி மனோகரன், ஒன்றிய பிரதிநிதி ஞானராஜ் வாழ்த்துரை வழங்கினார். பின் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வரும் காலங்களில் நம் கட்சியில் வேற்றுமை மறந்து ஒன்றாக செயல்படவேண்டும். வரும் பேரூராட்சி தேர்தலில் 18வார்டிலும் தி.மு.க.வேட்பாளர்களே போட்டியிட்டு முழு வெற்றி பெற வேண்டும்.
வீடு வீடாக சென்று நம் கழகம் ஆற்றிய தொண்டை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். செயல்படாத வார்டு செயலாளர்களை கட்சி மேலிடத்திற்கு தெரியபடுத்தி அவர்களை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு வார்டு செயலளர்கள், உடையார், மாற்கு தர்மகண், ஜேம்ஸ் ரவி, சரவணன், இளங்கோ, சிலாக்கியமணி, ஜெபசிங், தேவதாஸ், ஜாண்பென்சன், ஒன்றிய பிரதிநிதி, ஞானராஜ், மாணிக்கராஜ், ராமச்சந்திரன், தேவதாஸ்,
தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார், மாணவர்அணி அமைப்பாளர் பாலசந்திரன், வார்டு பிரதிநிதி சேகர், சாமுவேல், சத்திய மூர்த்தி, ஞானராஜ், ராஜாசிங், குமரேசன், முருகானந்தம், ஜெயகுமார்,
விமல் சுதாகர், ரவிசந்திரன், நீல்துரை, மகளிர் அணி செயலாளர் இந்திராணி, ஜெசி, சுயம்பு, பொண்மனி, பாக்கிய லெட்சுமி மற்றும் ஏராளமான கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.
நகர துணை செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக