செங்கம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 சொகுசு கார்களுடன் வெளிமாநிலத்தவர் 4 பேர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 ஜூன், 2026

செங்கம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 சொகுசு கார்களுடன் வெளிமாநிலத்தவர் 4 பேர் கைது !

செங்கம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 சொகுசு கார்களுடன் வெளிமாநிலத்தவர் 4 பேர் கைது !
திருவண்ணாமலை , ஜுன் 30 -
திருவண்ணாமலை மாவட்டம்பெங்களூரி லிருந்து திருவண்ணாமலைக்கு இரண்டு சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் போதைப்பொருள் தடுப் புப் பிரிவு போலீசார் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்குப் பெருமளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாகத் திருவண்ணா மலை மாவட்டக் காவல்துறை கண்காணி ப்பாளருக்கு (SP) ரகசியத் தகவல் கிடைத் தது. இந்தத் தகவலின் பேரில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணை கண் காணிப்பாளர் (DSP) செந்தில்குமார் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறை ஆய்வாளர் சிலம்பரசன் தலைமை யிலான போலீசார், செங்கம் அடுத்த சுண்டக்காபாளையம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து வந்த உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலப் பதிவு எண்களைக் கொண்ட இரண்டு சொகுசு கார்களைப் போலீசார் மறித்துச் சோதனையிட்டனர். பின்னர் அந்த காரில் ஹான்ஸ், விமல் பாக்கு மற்றும் கூல்லிப் உள்ளிட்ட 500 கிலோ எடையுள்ள சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது   சட்டவிரோத மாகப் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 500 கிலோ குட்கா மற்றும் கடத் தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு விலையுயர்ந்த சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், கடத்தலில் ஈடுபட்டவெளிமாநிலங்களைச் சேர்ந்த 4 பேரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்த னர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளி கள் மேலதிக நடவடிக்கைக்காகச் செங் கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனர். இச்சம்பவம் குறித்துச் செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
தமிழக குரல் செய்திகளுக்காக திருவண்ணாமலை மாவட்டசெய்தியாளர் 
-T.R.கலையரசு 
தொடர்புக்கு : 8678944230

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad