வாணியம்பாடி அருகே தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் மணல் திருட்டு. பொதுமக்கள் சென்றதால் தப்பியோடிய கொள்ளையர்கள் !
வாணியம்பாடி, ஜூன்.19-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதி யில் தூய நெஞ்ச இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத் திற்கு தானமாக வழங்கப்பட்ட காலி இடத் தில் சிலர் நூதன முறையில் மணல் திருட் டில் ஈடுபட்டு வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு மணலை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி வைத்திருந்த மர்ம நபர்கள், பொதுமக்களை கண்டதும் மணல் மூட்டைகளை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து பொதுமக்கள் வாணியம் பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை கைப்பற்றி அகற்றினர். சம்பவம் தொடர் பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக