சாதி வாரி கணக்கெடுப்பு முதல்வர் மற்றும் அன்புமணிக்கு நன்றி தெரிவித்த பாமகவினர்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !
குடியாத்தம் ஜூன் 19
வேலூர் மாவட்டம் குடியாத்தம்,, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று தமிழக ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலை யில் ஆளுநர் உரையில் தமிழகத்தில் சமூக நீதி சர்வே என்ற பெயரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கவர்னர் உரையில் அறிவிக்கப் பட்டு ள்ளது இதனை வரவேற்ற அன்புமணி இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மயில்கல் என்றார் மேலும் இது ஒரு சாதிக்கான பிரச்சனை அல்ல தமிழகத் தின் சமூக நீதி பிரச்சனை இந்த சர்வே எடுக்கப்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் வளரும் என தெரிவித்த அன்புமணி வர வேற்பு தெரிவித்து இருந்தார்.
இதனை யடுத்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே சாதி வாரி கணக்கெடுக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்ட தை தொடர் ந்து முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக் கும் பாமக தலைவர் அன்பு மணிக்கும் நன்றி தெரிவித்து பாமகவி னர் பட்டாசு கள் வெடித்து பொதுமக்களு க்கு இனிப்புகளை வழங்கி கொண் டாடினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக