கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வரும் நிமிர் குழுவினர், சமூக அக்கறை மற்றும் மனிதநேய பணிகளில் தொடர்ந்து சிறப்பான சேவைகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மங்கலகுன்று, கண்ணன்விளை பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஜெர்கோத்தம்மாள் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்தது நிமிர் குழுவினரின் கவனத்திற்கு வந்தது.
மூதாட்டியின் நிலையை நேரில் ஆய்வு செய்த நிமிர் குழுவினர், அவருக்கு பாதுகாப்பான மற்றும் நிம்மதியான வாழ்வை ஏற்படுத்தும் நோக்கில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில், ஜெர்கோத்தம்மாளை “அடைக்கலம்” முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்து, அவருக்கு தேவையான பராமரிப்பு மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்தனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் ஆதரவற்றோர், முதியவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோரின் நலனிலும் அக்கறை செலுத்தி வரும் நிமிர் போலிசாரின் அணுகுமுறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக