டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கல்வி அறக் கட்டளை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஜூலை, 2026

டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கல்வி அறக் கட்டளை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு !

டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கல்வி அறக் கட்டளை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு !
குடியாத்தம் , ஜூலை 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செரு வங்கி அண்ணா நகர் பவன் உள் விளை யாட்டு அரங்கத்தில்பாபாசாகேப் டாக்டர் B.R. அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை சார்பில் 10 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது கல்வி அறக்கட்டளை தலைவர் இரா. பாஸ்கர் தலைமை தாங்கினார். இரா. முத்துக் குமார் வரவேற்புரை ஆற்றினார். கருத் தியல் தலைவர்கள் புலவர் சுப்ரமணி ஆசிரியர்கள் ஏகாம்பரம் சம்பத் கண்ணன் கோடீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வழக்கறிஞர் பாலகுமரன் செந்தமிழ் சரவணன் வாழ்த்துரை வழங்குகினர் விழா ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக தயாளன் நீதித்துறை ராஜா ஏற்பாடு செய்தார்கள். உடன் பாபா சாகேப்  டாக்டர் B.R. அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் குப்புசாமி அமிர்தலிங்கம் ஜம்புநாதன் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் பொருளாளர் பேங்க் மேலாளர் ஓய்வு சிவமணி நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad