அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2026 - 2027 இட ஒதுக் கீடு வழி முறைகளின் படி கலந்தாய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜூலை, 2026

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2026 - 2027 இட ஒதுக் கீடு வழி முறைகளின் படி கலந்தாய்வு !

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2026 - 2027 இட ஒதுக் கீடு வழி முறைகளின் படி கலந்தாய்வு !
குடியாத்தம் ஜூலை 7 
வேலூர் மாவட்டம் குடியேற்றம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 05.06.2026 அன்று முதல் தொட ங்கி நடைபெற்று வருகிறது. இடஒதுக்கீடு வழிமுறைகளின்படி, மீதமுள்ள 386 காலி இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு 09.07.2026 அன்று நடைபெறவுள்ளதுஇதற் கான மின்னஞ்சல் மூலம் மாணவர்களு க்கு அனுப்பப்பட்டு, தொலைபேசி குறுஞ் செய்தி தகவலும் அளிக்கப்படுகிறது.இது தவிர இடஒதுக்கீடு வாரியான காலியிட விவரங்கள்கல்லூரி இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம். இதில் 16.06.2026-க்கு பின்னர் 06.07.2026 முடிய மூன்றாம் கட்டமாக இணைய வழியில் விண்ணப் பம் சமர்ப்பித்தவர்கள் கலந்து கொள்ள லாம்  காலியாக உள்ள இனச்சுழற்சி இடங்களுக்கு அரசு விதிகளின்படி மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இக்கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் காலை 09.30 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும்.மூன்றாம் கட்ட கலந்தாய்வு 09.07.2026 அன்று முதல் கீழ்காணும் பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.
09.07.2026 : தமிழ் B.A.Tamil, Shift - I (T/M),
ஆங்கிலம் B.A. English, Shift - I (E/M),
வணிகவியல் B.Com, Shift – I (E/M), Shift-II (T/M, E/M), வணிக நிர்வாகவியல், BBA Shift - I & II (E/M),கணிதவியல் B.Sc. Maths, Shift - I & II (T/M, E/M),இயற்பியல் B.Sc. Physics, Shift – I (T/M, E/M), வேதியியல் B.Sc. Chemistry, Shift - I & II (T/M, E/M),
தாவரவியல் B.Sc. Botany, Shift – I & II (T/M, E/M), வரலாறு B.A. History, Shift – I (T/M) மற்றும் பொருளியல் B.A. Economics, Shift - I & II (T/M, E/M).தேவையான ஆவணங்கள்
1. இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்ப படிவம், 2. மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல், 3. 10, 11, 12 ஆம்  வகு ப்பின் மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல், 4. ஆதார் அட்டை, 5. சாதி சான்றிதழ், 6. கடவுச்சீட்டு அளவு புகைப் படம்-2 மற்றும்7. வங்கி புத்தக நகல் (Bank Pass Book Xerox) மேற்குறிப்பிட்டஆவணங் களை கலந்தாய்வில் பங்குபெறும் மாணாக்கர்கள் அவசியம் கொண்டு வருதல் வேண்டும். இக்கலந்தாய்வு அரசின் வழிகாட்டுதலின்படி, இடஒதுக் கீட்டின் மூலம் பின்பற்றி முறையாக நடைபெறும் என தெரிவிக்கலாகிறது. சென்ற முறை கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.முனைவர் ஜெ. எபெனேசர்
முதல்வர் தெரிவித்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad