கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து, 22 வயது செவிலியர் ஆஷிகா உயிரிழந்தார்.
ஆற்றூரைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜின் மகளான ஆஷிகா, கடந்த 8 மாதங்களாக அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
அண்மையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி திருமணம் நடக்க இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என ஆஷிகாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக