அதிமுக ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் கே.சி.வீரமணி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் கே.சி.வீரமணி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம்  கே.சி.வீரமணி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.
வாணியம்பாடி, ஜூலை.26- 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட செய லாளர் டாக்டர் எஸ். பசுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப் போது, முன்னாள் அமைச்சரும் ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. வீரமணி குறித்து சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப் படும் மாதனூர் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிர் வாகிகள் கோரிக்கை வைத்தனர்.இதில், கூட்டம் முடிந்த பிறகு இந்த விவகாரம் குறித்து பேசலாம் என்று ஒரு தரப்பினர் கூறிய நிலையில், வெங்கடேசன் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற் பட்டு, சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது.பின்னர் நிலைமை சீரடைந்த தைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். மேலும், தன்னை அவ தூறாக விமர்சித்ததாக கூறப்படும் மாத னூர் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நேரில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை கட்சியின் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன் எனக் கூறி அவர் அங்கிருந்து வெளியேறினார்.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad