வவ்வால்களின் புகலிடமாக மாறிய தோப்பு ! பட்டாசு, மேளம் உள்ளிட்ட சத்த மான கொண்டாட்டங்களை தவிர்க்கும் கிராம மக்கள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜூலை, 2026

வவ்வால்களின் புகலிடமாக மாறிய தோப்பு ! பட்டாசு, மேளம் உள்ளிட்ட சத்த மான கொண்டாட்டங்களை தவிர்க்கும் கிராம மக்கள் !

வவ்வால்களின்  புகலிடமாக  மாறிய தோப்பு ! பட்டாசு, மேளம் உள்ளிட்ட சத்த மான கொண்டாட்டங்களை தவிர்க்கும் கிராம மக்கள் !
வாணியம்பாடி, ஜூலை.4- 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் கிராமத்தில், ஊராட்சி க்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள வவ்வால் தோப்பு, பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான வவ்வால்களின் இயற்கை வாழ்விடமாக திகழ்ந்து வருகி றது.இந்த வவ்வால் தோப்பு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான தேங்காய் மண்டி இயங்கி வருகிறது. அதைச் சுற்றி யுள்ள புளிய மரங்களில் பல ஆண்டுக ளாக நூற்றுக்கணக்கான வவ்வால்கள் தஞ்சமடைந்து வருகின்றன. தினமும் மாலை சுமார் 6.30 மணியளவில் கூட்டம் கூட்டமாக உணவு தேடி பறந்து செல்லும் வவ்வால்கள், மீண்டும் விடியற்காலை யில் புளிய மரங்களுக்கே திரும்பி வந்து தங்குகின்றன.  இந்த காட்சியை தினமும் காண அப்பகுதி மக்கள் மற்றும் வழிப் போக்கர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
வவ்வால்களின் வாழ்விடத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில், புளியந்தோப்பை ஒட்டிய பகுதியில் விசேஷ நாட்களிலும் பட்டாசு வெடித்தல், மேளம் உள்ளிட்ட அதிக சத்தம் எழுப்பும் கொண்டாட்டங்களை கிராம மக்கள் தன்னார்வமாக தவிர்த்து வருகின் றனர்.கிராமத்திற்குள் வேட்டையாட யாருக்கும் அனுமதிப்பதில்லை. வவ்வால் களின் எச்சத்தால் இதுவரையில் யாருக் கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இயற்கை உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் கிராம மக்கள் கடைப்பிடித்து வரும் இந்த விழிப்புணர்வான நடவடிக் கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பாராட்டப்படுகிறது.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad