ஸ்ரீவைகுண்டம் ஜூலை 5. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் மூன்றாவதான திருப்புளிங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது.
சென்ற ஆண்டு ஆனி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று அந்த நாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம்.8 மணிக்கு ஸ்தாபன கலசங்கள் வைத்து ஹோமம் செய்து பூரணாகுதி நடந்தது.
குழப்பங்கள் மூலவர் பூமிபாலகர் உற்சவர் காய்சினவேந்தன் மற்றும் தாயார்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். 12 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஸ்ரீனிவாசன், ஸ்ரீவேங்கடகிருஷ்ணன். அனந்த வெங்கடேசன் ஆகியோர் சேவித்தனர்.
சாத்து முறை கோஷ்டி நடந்தது. தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5. 15 மணிக்கு சாயரட்சை. உற்சவர் காய்சினவேந்தன் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார்.
7.15 கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்து குடவருவாயில தீபாராதனை நடந்தது. மாடவீதி மற்றும் ரத வீதி உலா வந்தார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். கோபாலகிருஷ்ணன். ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நிஷாந்தினி, அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா, உறுப்பினர்கள் மாரியம்மாள், சண்முகசுந்தரம், பேக்கிரி முருகன், முத்துகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக