குடியாத்தம் கோல்டன் கேலக்சி ரோட்டரி சங்கத்தின் புதிய கட்டிடத்திற்காக நிதி வழங்குதல் !
குடியாத்தம் ஜூலை 19
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2026–27 ஆம் ஆண்டிற்கான குடியாத்தம் கோல்டன் கேலக்சி ரோட்டரி சங்கத்தின் பதவி ஏற்பு விழா சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 2025–26 ஆம் ஆண்டின் தலைவர் Rtn. V. மாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார். சாசனத் தலைவர் Rtn. M. கோபிநாத் அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
இவ்விழாவில், 2026–27 ஆம் ஆண்டிற் கான தலைவராக Rtn. J. பிரதீப், செய லாளராக Rtn. S. அருள், பொருளாளராக Rtn. M. கோபிநாத் ஆகியோர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர் விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் Rtn. T. S. ரவிக் குமார், முன்னாள் மாவட்ட ஆளுநர் Rtn. J. K. N. பழனி, ஆளுநர் தேர்வு Rtn. Dr. T. சிவக்குமார், KMG கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு K. M. G. ராஜேந்திரன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்
க.சிந்து. அழகப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய நிர்வாகக் குழுவினருக்கு வாழ்த்து களைத் தெரிவித்து சிறப்புரையாற்றினர்.
மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகக் குழுவினருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித் தனர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பல் வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட் டன. பேருந்து விபத்தில் இரு கால்களை யும் இழந்த மாற்றுத்திறனாளி ஒருவரு க்கு சங்கத்தின் சார்பில் வீல்சேர் வழங் கப்பட்டது. மேலும், சலவைத் தொழில் செய்து வாழ்வாதாரம் நடத்தி வரும் பெண்மணி ஒருவருக்கு அயர்ன் பாக்ஸ் கள் உள்ளிட்ட தொழில் மேம்பாட்டு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த மனிதநேயச் சேவைகள் பொது மக்களின் பாராட்டைப் பெற்று, சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தன.
மேலும், சங்கத்தின் புதிய நிரந்தர கட்டி டம் கட்டும் பணிக்காக ரூ.3 லட்சம் முன் பணமாக, சிறப்பு விருந்தினர்கள் முன்னி லையில் பொறியாளரிடம் வழங்கப் பட்டது. இந்த நிகழ்வு, சங்கத்தின் வளர்ச் சிக்கும் எதிர்கால சமூகப் பணிகளுக்கும் வலுவான அடித்தளமாக அமைந்தது.அத் துடன்,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்துஅவர்களின் வேண்டு. கோளின் பேரில், மோர்தனா அணையைச் சுற்றி யுள்ள கிராமங்களில் வசிக்கும் பெண் களுக்கான கழிப்பிடங்கள் கட்டித்தரப் படும் என சங்கத்தின் சார்பில் உறுதியளி க்கப்பட்டது.இறுதியாக, புதிய நிர்வாகக் குழுவினருக்கு அனைவரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, சமூக நலப் பணிகளில் தொடர்ந்து சிறந்து விளங்க வாழ்த்தினர்.உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழலில் பதவி ஏற்பு விழா இனிதே நிறைவுற்றது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக