ஆற்காட்டில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சிறப்பு நிகழ்ச்ச !ி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2026

ஆற்காட்டில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சிறப்பு நிகழ்ச்ச !ி

ஆற்காட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி
ஆற்காடு, ஜூலை 18:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், அனைத்து இந்திய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் (ஆற்காடு), SC அகர் வால் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி இணை ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சியை இன்று நடத்தின.
இந்நிகழ்ச்சிக்கு திரு. குப்புசாமி ராகவன் தலைமை தாங்கினார்.சம்பத் முன்னிலை வகித்தார். எஸ். நாகராஜன் வரவேற்புரை மற்றும் தொடக்க உரையாற்றி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத் திற்கு இதுபோன்ற சேவை நிகழ்ச்சிகள் அவசியம் என வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராணிப் பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளர் மா. சிபின், ஐ.பி.எஸ். அவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தை களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், சமூகத்தில் அனை வருக்கும் சம வாய் ப்பும் மரியாதையும் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தனது உரை யில் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அனை த்து இந்திய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள், பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்  

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே   சுரேஷ்குமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad