குடியாத்தம் ரோட்டரி சங்க புதிய தலை வருக்கு வாழ்த்து தெரிவித்த தவெக நகர நிர்வாகி ஜி.எஸ். வெங்கடேசன் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜூலை, 2026

குடியாத்தம் ரோட்டரி சங்க புதிய தலை வருக்கு வாழ்த்து தெரிவித்த தவெக நகர நிர்வாகி ஜி.எஸ். வெங்கடேசன் !

குடியாத்தம் ரோட்டரி சங்க புதிய தலை வருக்கு வாழ்த்து தெரிவித்த தவெக நகர நிர்வாகி ஜி.எஸ். வெங்கடேசன் !
குடியாத்தம், ஜூலை 21
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக டி.எஸ்.இரவிச்சந்திரன் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)குடியாத்தம் நகர நிர்வாகி ஜி.எஸ். வெங்கடேசன்புதிய தலைவர் டி.எஸ். இரவிச்சந்திரன நேரில் சந்தித்துசால்வைஅணிவித்துபூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, புதிய நிர்வாகம் சமூக நலன், கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பாது காப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைத் திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து, ரோட்டரி இயக்கத்தின் உயரிய இலக்கு களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று ஜி.எஸ். வெங்கடேசன் வாழ்த்தி னார் இந்த நிகழ்வில், காட்பாடி ரோட்டரி சங்கத்தின் தலைவர் அழகப்பன், வழக் கறிஞர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய தலைவருக்கு வாழ்த்து களைத் தெரிவித்தனர்.நிகழ்ச்சி நிறை வில் அனைவரும் புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, சமூக சேவையில் தொடர்ந்து இணைந்து செயல்பட உறுதியளித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad