வாலாஜா வேதவல்லி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி விளையாட்டு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஜூலை, 2026

வாலாஜா வேதவல்லி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி விளையாட்டு விழா!

வாலாஜா வேதவல்லி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி விளையாட்டு விழா!
வாலாஜா , ஜூலை 20 -
ராணிப்பேட்டை  மாவட்டம் வாலாஜா அடுத்த சென்னை சமுத்திரம் டோல்கேட் அருகே உள்ள வேதவல்லி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் 33வது ஆண்டு விளையாட்டு விழா ராணிப் பேட்டை ஆண்டாள் ரங்கசாமி விளை யாட்டு அரங்கில் நடைபெற்றது இப்பள்ளி மாணவ மாணவியருக்கு 100, 200, 400 ஓட்டபந்தையம் மற்றும்  4×100 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் மற்றும் உயரம்
தாண்டுதல், ஈட்டி மற்றும் தட்டு எறிதல், கபாடி,கால்பந்து, கை பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.இதற்காக மதர் தெரெஸா, ரபின்திரநாத் தாகுர், சந்திர
சேகர், சி.வி.ராமன், கர்கோபிந்த் குராணா அணிகளுக்குஇடையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவிற்கு பள்ளி இயக்குனர் டாக்டர் பூமா பார்த்தசாரதி தலைமை 
வகித்தார் பள்ளி மாணவத் தலைவர் பிரசண்னா நிவாஸ் வரவேற்றார்.பள்ளி தாளாளர்வித்யா சம்பத்,இயக்குனர்
அனந்தராமன்,பள்ளி முதல்வர் பானு முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் டெல்லி கேபிடல் கிரிக்கெட் அணியின்
முன்னணி மதிப்பீட்டாளருமான  விக்ரம் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக பங் கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர் களு க்கு வெற்றி கோப்பைகள் மற்றும்
சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார்
அவர் பேசுகையில்:விளையாட்டு என்பது மனிதனுக்கு உடல் வலிமையும் ஆரோக்கி யமும் வழங்குகிறது.வேதவல்லி வித்யா லயா பள்ளி மாணவர்களுக்கு சிறந்த 
கல்வி வழங்குவதுடன் சிறந்த பயிற்சி யாளர்களை கொண்டு விளையாட்டு பயிற்சிவழங்கி வருகிறது இப்பள்ளியின் முன்னாள்மாணவரான நான் இப்பள்ளி யில் பெற்ற விளையாட்டு பயிற்சியால்
சிறப்பாக செயல்பட முடிகிறது என்றார். மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார். போட்டிகளில் சந்திரசேகர் ஹவுஸ் அணி சேம்பியன் பட்டம் பெற்றது. சி.வி.ராமன் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது முடிவில் தலைமை ஆசிரியை லட்சுமி நன்றி தெரிவித்தார் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பரதொடர்புக்கு:
9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad