பொது இடத்தில் அனுமதியின்றி அமைக் கப்பட்ட கொடிக்கம்பம் அகற்ற தாசில்தார், வருவாய்த் துறை மற்றும் காவல் துறை யினருக்கு பொதுமக்கள் பாராட்டு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

பொது இடத்தில் அனுமதியின்றி அமைக் கப்பட்ட கொடிக்கம்பம் அகற்ற தாசில்தார், வருவாய்த் துறை மற்றும் காவல் துறை யினருக்கு பொதுமக்கள் பாராட்டு !

பொது இடத்தில் அனுமதியின்றி அமைக் கப்பட்ட கொடிக்கம்பம் அகற்ற தாசில்தார், வருவாய்த் துறை மற்றும் காவல் துறை யினருக்கு பொதுமக்கள் பாராட்டு !
அணைக்கட்டு , ஜூலை 27 -
           வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, சத்தியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மாட்டுச் சந்தைக்கு புகழ்பெற்ற பொய்கை சந்தை அருகே, பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக் கம்பம் மற்றும் அதற்கான சிமெண்ட் அடித்தளம் அனுமதியின்றி பொது இடத் தில் அமைக்கப்பட்டிருந்தது. பொது இடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப் பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்று மாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு ள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டி ருந்த இந்த கொடிக்கம்பம் குறித்து தக வல் கிடைத்ததைத் தொடர்ந்து, அணைக் கட்டு தாசில்தார் சுகுமாரன், விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவ சந்திரன் உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற் கொண்டனர். பின்னர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வரு வாய்த் துறை அலுவலர்கள், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) நந்தகுமார், காவல் ஆய்வாளர் செல்வ ராஜ், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை தாங்களே அகற்றுவ தாகவும், சட்டத்தை முழுமையாக மதித்து செயல்படுவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் கொடிக்கம்பம் மற்றும் அதன் சிமெண்ட் அடித்தளம் அகற்றப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான பொது இடம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது.இந்த நடவடிக்கை யால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது. பொது இடத் தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அணைக்கட்டு தாசில்தார், வருவாய்த் துறை அதிகாரிகள், ஊழி யர்கள் மற்றும் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad