மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் !
ராணிப்பேட்டை , ஜூலை 13 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ஜுலை
11, உலக மக்கள் தொகை தினத்தை யொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் பேரணி மற்றும் பிரச்சார வாகனத்தை கொடி யசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சி.பேபி இந்திரா, துணை இயக்குனர் (குடும்ப நலம்) மரு.மணிமேகலை, நேர்முக உதவி யாளர் (பொது) கீதாலட்சுமி (பொறுப்பு) மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக