வாலாஜாவில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 ஜூலை, 2026

வாலாஜாவில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் !

வாலாஜாவில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு
அகற்றக் கோரி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் !
ராணிப்பேட்டை , ஜூலை 12 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை நகராட்சி 14-வது வார்டில் உள்ள திரௌபதி அம்மன்கோவில் சுற்றுவட்டார பகுதியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக
பயன்பட்டு வரும் அரசு நத்தம் புறம் போக்கு நிலத்தை (நகர புல எண்: 2126),
சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக புகார். உதவும் புறவைகள் பொதுநல சேவை அமைப்பின் தலைவர் க.குமார் மற்றும் பொதுமக்கள் வட்டாட் சியரிடம் மனு அளித்தனர். முறையான அங்கீகாரம் இன்றி வணிக நோக்கில் கடைகள்,கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விட முயற்சி என குற்றச்சாட்டு. அதி காரிகள் ‘சர்க்கார் நத்தம்' என சான்ற ளித்தும், ஆக்கிரமிப்பாளர் மிரட்டி, சட்ட விரோத கட்டுமானம் மற்றும் பட்டா பெற முயற்சி.பொதுமக்களின் வழித்தடத்தை மறித்துள்ள ஆக்கிரமிப்புகளை உடன டியாக அகற்றி, அரசு நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர், நக ராட்சி ஆணையாளர், காவல் துறை யினருக்கு கோரிக்கை பலதரப்பட்ட சமூக ஆர்வலர்களும் கோரிக்கை மனு அளித் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad