சோளிங்கர் எம் எல் ஏ மற்றும் குண்டர்கள் செய்தியாளர்களை தாக்கியதை கண்டி த்து செய்தியாளர்கள் கண்டன ஆர்ப் பாட்டம் !
குடியாத்தம் ,ஜூலை 28
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் சோளிங்கர் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற கல்யாண சுந்தரம் மற்றும் அரங்கநாதன் ஆகிய
செய்தியாளர்களை கொலை வெறி தாக் குதல் நடத்திய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும்ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செய்தியா ளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் S.P.கோபி நாத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த செய்தியாளர்கள் நடராஜன், சுந்தரமூர்த்தி, கேசவன் மற்றும் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் பத்திரிக்கை யாளர் மற்றும் வழக்கறிஞருமான ரமேஷ்குமார் கண்டன உரையாற்றினார்
ஆர்ப்பாட்டத்தில் குடியாத்தம், பேரணாம் பட்டு, கே.வி. குப்பம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் சேர்ந்த செய்தியா ளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக