வைக்கோல் மேய்ந்த பசுமாடு விவகாரம் மூதாட்டிகள் மீது தாக்குதல் – சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜூலை, 2026

வைக்கோல் மேய்ந்த பசுமாடு விவகாரம் மூதாட்டிகள் மீது தாக்குதல் – சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு !

வைக்கோல் மேய்ந்த பசுமாடு விவகாரம் மூதாட்டிகள் மீது தாக்குதல் – சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு !
வாணியம்பாடி, ஜூலை.15- 
திருப்பத்தூர் அருகே வைக்கோல் புல்லை பசுமாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மூதாட்டிகள் இருவரை கண வன், மனைவி தாக்கிய சம்பவம் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கோடியூர் அருகே அங்கநாதவலசை பகுதியைச் சேர்ந்த அருள் – சோனியா தம்பதியினர் பசுமாடு வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், அண்டை வீட்டைச் சேர்ந்த ஜெயமணிக்கு சொந்தமான வைக்கோல் புல்லை, ஜெயமணி வீட்டில் இல்லாத நேரத்தில் சோனியாவின் பசுமாடு மேய்ந் ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜெயமணிக்கும் சோனியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த அக்கா–தங்கைகளான லலிதா (வயது 65) மற்றும் புஷ்பா (வயது 60) ஆகியோர், ஜெயமணியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்ததாக கூறி, ஆத்திரமடைந்த சோனியா மற்றும் அவரது கணவர் அருள் ஆகியோர் இருவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காய மடைந்த லலிதா மற்றும் புஷ்பா ஆகி யோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் செய்தியாளர் மஞ்சுநாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad