அரசு பட்டா வழங்கியிருந்தும் அதற்கான நிலத்தை ஒதுக்கவில்லை என விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

அரசு பட்டா வழங்கியிருந்தும் அதற்கான நிலத்தை ஒதுக்கவில்லை என விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு !

அரசு பட்டா வழங்கியிருந்தும் அதற்கான நிலத்தை ஒதுக்கவில்லை என விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு !
வேலூர், ஜூலை 27:
வேலூர் மாவட்டம்  23 பேருக்கு அரசு பட்டா வழங்கியிருந்தும், அதற்கான நிலத்தை இதுவரை ஒதுக்கி வழங்காததை கண்டி த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த மனு அளிக்கும் நிகழ்வில்,பாதிக்கப் பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர் பட்டா நகலை மட்டும் வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?அரசு வழங்கிய பட்டாவிற்கு உரிய இடத்தை உடனடியாக ஒதுக்க வேண்டும்" என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், 23 பயனாளி களுக்கும் பட்டாவிற்குரிய நிலத்தை அதிகாரிகள் உடனடியாக அளவீடு செய்து ஒதுக்கி வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்க ளை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்றும் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார்.இந்த சம்பவத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad