ஸ்ரீவைகுண்டம் ஜூலை 29. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் மூன்றாவதான திருப்புளிங்குடி கோயிலில் பவித்ரோத்ஸவம் நடந்தது.
ஓவ்வொரு ஆண்டும் கோவில் நடைமுறையில் ஏற்படும் விடுதல்களுக்கு பரிகாரமாக பவித்ரோத்ஸவம் நடப்பது வழக்கம். கடந்த ஜூலை 26. ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.
மூலவர். உற்சவர் தாயார்கள் மற்றும் சன்னதி பெருமாள்களுக்கும் பவித்ரா மாலைகள் சாற்றப்பட்டது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 930 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு உற்சவர் காய்சினவேந்தப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார்.
அர்ச்சகர்கள் ரமேஷ் . கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஹோமம் செய்தனர். பின்னர் 12.15 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சீனிவாசன் தலைமையில் திருவேங்கடத்தான். ராமகிருஷ்ணன். அனந்த வெங்கடேசன். சுந்தர கோபாலன்.அனந்தாழ்வான். கிருஷ்ணன். மதுரகவி. ஆகியோர் சேவித்தனர்.
தீபாராதனை சாத்து முறை முடிந்து தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நாளை மாலை மூலவர். உற்சவர் மற்றும் சன்னதி பெருமாள்களிடம் இருந்து பவித்ரா மாலைகள் படிகளையப்படும்.
மாலை 5 மணிக்கு சாயரட்சை.உற்சவர் காய்சினவேந்தப் பெருமாள் ஸகருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு 7.30 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன் சீனிவாசன் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா
உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக