வங்கியில் தவறவிட்ட ஒரு பவுன் தங்க நகை! எடுத்துச் சென்ற பெண் சிசிடிவி கேமராவில் சிக்கினார் போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜூலை, 2026

வங்கியில் தவறவிட்ட ஒரு பவுன் தங்க நகை! எடுத்துச் சென்ற பெண் சிசிடிவி கேமராவில் சிக்கினார் போலீசார் விசாரணை !

வங்கியில் தவறவிட்ட  ஒரு பவுன் தங்க நகை! எடுத்துச் சென்ற பெண் சிசிடிவி கேமராவில் சிக்கினார்  போலீசார் விசாரணை !
வாணியம்பாடி, ஜூலை.28- 
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் மனைவி சரளா (வயது 39), கடந்த ஆண்டு எஸ்.கோடியூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் ஒரு சவரன் தங்க நகையை அடகு வைத் திருந்தார்.அந்த நகையை மீட்பதற்காக இன்று வங்கிக்கு சென்ற அவர், உரிய தொகையை செலுத்தி நகையைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார். அப்போது, தங்க நகை வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற பர்ஸை தனது தாயார் கற்பகம் (வயது 62) என்பவரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வங்கிக்குள் சென்றதாக கூறப் படுகிறது.இதற்கிடையில், கற்பகம் வைத் திருந்த பர்ஸ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளது. அதை கவனிக்காமல் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர், வங்கிக்கு வந்திருந்த சிவப்பு நிற புடவை அணிந்திருந்த பெண் ஒருவர் அந்த பர்ஸை எடுத்துச் சென்றதாக கூறப் படுகிறது.இந்த சம்பவம் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற் போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.இதுகுறித்து சரளா, பர்ஸில் இருந்த ஒரு பவுன் தங்க நகை யை மீட்டுத் தரக் கோரி, சிசிடிவி காட்சி யுடன் ஜோலார்பேட்டை காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, பர்ஸை எடுத்துச் சென்ற பெண்ணை அடையா ளம் காணும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக ஊடக செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad