சோளிங்கர் எம்.எல்.ஏ.வை கண்டித்து திருப்பத்தூரில் பத்திரிக்கையாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜூலை, 2026

சோளிங்கர் எம்.எல்.ஏ.வை கண்டித்து திருப்பத்தூரில் பத்திரிக்கையாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

சோளிங்கர் எம்.எல்.ஏ.வை கண்டித்து திருப்பத்தூரில் பத்திரிக்கையாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
வாணியம்பாடி, ஜூலை.28- 
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரி க்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தாகக் கூறப்படும் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, திருப்பத்தூர் மாவட்ட பத்திரி க்கையாளர்கள் சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் கள்பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்த துடன், சம்பவத்தில் தொடர்புடையோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற தாக்கு தல் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப் பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு ஊடகங் களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு, கண்டன முழக்கங்க ளை எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது .

தமிழக ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad