"We The Leaders" போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நடைப் பயணம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

"We The Leaders" போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நடைப் பயணம் !

"We The Leaders"  போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நடைப் பயணம் !
குடியாத்தம் , ஜூலை 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் "We The Leaders – போதை இல்லா தமிழகம்" விழிப்புணர்வு நடைப்பயணம், ஆர். ரமணா B.Tech (IT), அவர்களின் தலை மையிலும், B. Sugash, B.C.A அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.மேலும், மூகாம்பிகை சம்பத், சி.ஆர். பாலாஜி, எம்.கே. சூர்யா, கோபிஆகியோரின் வழி காட்டுதலின்படி இந்நிகழ்ச்சி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.இந்நடைப்பயனம்
புதிய பஸ் நிலையத்தில் தொடங்கியது
பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் குடியாத்தம் ஒன்றியம் மற்றும் குடியாத்தம் நகரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான We The Leaders நிர்வாகிகள் மற்றும் உறுப் பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மேலும், மாற்றுக் கட்சியில் இருந்து முன்னாள் திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) ஒன்றிய சேர்மன் திரு. சீவூர்  துரைசாமி அவர்கள் We The Leaders இயக்கத்தில் இணைந்து, நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தார். இந்நிகழ்ச்சி யை சிறப்பித்த சதீஷ் புண்ணியகோடி, ஆர். சந்தோஷ் குமார்,முத்துப்பாண்டியன், தங்கபாண்டியன், மஞ்சு மற்றும் கோபி சுந்தர் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"போதை இல்லா தமிழகம் – வளமான இளைஞர்கள், பாதுகாப்பான சமுதாயம்!என்று கோஷங்கள் எழுப்பினார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad