சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவி லுக்கு கிடாய் வெட்டி விருந்து வைத்த தொண்டர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவி லுக்கு கிடாய் வெட்டி விருந்து வைத்த தொண்டர் !

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவி லுக்கு கிடாய் வெட்டி விருந்து வைத்த தொண்டர் !
குடியாத்தம், ஜூலை 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கொல்லைமேடு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமம் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாகும். இந்தப் பகுதியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, இந்த கிரா மத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கே.வி குப்பம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் தென்றல் குமார் அவர்கள் அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதிகொடுத் திருந்தார்.இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சேர்ந்த தமிழக வெற்றி கழகத் தின் குடியாத்தம் மேற்கு ஒன்றியம் செய ற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் மீனூர் கொல்லைமேடு பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் கே.வி குப்பம் சட்டமன்ற உறுப்பினராக தென்றல் குமார் வெற்றி பெற்று வந்தால், இந்தப் பகுதி யில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடாய் வெட்டி பிரியாணி போடுவதாக வேண்டிக்கொண்டார். 
இதனைத் தொடர்ந்து இன்று அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கிடாய் வெட்டி கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார் தலைமை யில் குமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
முன்னதாக காளியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செய்யப் பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ரேஷன் கடை அமைப்பதற்கு இடத்தை பார்வையிட்டார் அந்த பகுதி யில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கேட்டறிந்து பொதுமக்கள் கொடு த்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad