கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !
வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல், விழிப்புணர்வு முகாம் 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம், கல்லப்பாடி இணைந்து நடத்திய இந்த முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை குடியாத்தம் அருகேயுள்ள அருணாச்சல யோகா தவமையம், காளி யம்மன்பட்டியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்ற அவைத்தலைவர் ப.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முனைவர் வே. வினாயகமூர்த்தி தொடக்க உரையாற்றி முகாமை தொடங்கி வைத்தார். பொரு ளாளர் கோ.ஜெயவேலு வரவேற்புரை ஆற்றினார். தலைமை ஒருங்கிணைப் பாளர் கராத்தே பி.பொன்னரசு இணைப் புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர் களாக மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பி.தனபால் குடியாத்தம் ரோட் டரி சங்க செயலாளர் ஜெ.தமிழ்ச் செல் வன் சமூக ஆர்வலர் வெ.ரா.நபீஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.மருத்துவர்கள் பங்கேற்பு: அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் *Dr.R.சரவணன் M.S. நட மாடும் மருத்துவக்குழு மருத்துவர் Dr.கீர்த் தனா M.B.B.S., அரசு சமுதாய சுகாதார நிலையம் கல்லப்பாட Dr.பா.காவியா B.S.M.S.,மற்றும் பல் மருத்துவர் Dr.T.தமிழ் மதி B.D.S.ஆகியோர் முகாமில் பங்கேற்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.முகாம் சிறப்புகள
மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை, பொது மருத்து வம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப் பட்டன.இந்த முகாமில் நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிர் அணி தலைவர் எம்.அபிராமி, செயலாளர் பொ.விஜயா, மாணவர் அணி இரா.பாஸ்கர், ஏ.கி.திகழரசு ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் மா.கோ.ஞானசேகர் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக